தமிழ் திரைப்படங்கள்

Thursday, August 7, 2014

நகைச்சுவை நடிகர் சுருளி மனோகர் மரணம்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த "சூப்பர் 10' நிகழ்ச்சியின் மூலம் பெயர் பெற்ற சுருளி மனோகர் சுறா, படிக்காதவன் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களை ஏற்று நடித்துள்ளார். கடந்த சில மாதங்களாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த சுருளி மனோகருக்கு இன்று பிற்பகலில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. 



Wednesday, August 6, 2014

'கத்தி’ பட தயாரிப்பாளர் ராஜபக்சவின் பினாமியா?


லைக்கா நிறுவனம் தயாரிப்பில் விஜய் நடிக்கும் கத்திபடத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படத்தை தயாரித்து வரும் லைக்கா நிறுவனம், இலங்கை அதிபர் ராஜபக்சவின் ஆதரவு பெற்ற நிறுவனம் என்று படம் தொடங்கிய நேரத்தில் செய்திகள் வெளியாயின. இதை கத்தி படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் முதலில் இருந்தே மறுத்து வந்தார்.  இதன் பிறகு அடங்கியிருந்த இந்த பிரச்சினை இப்போது மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது.

மேலும் விரிவான செய்திகளுக்கு.....

Tuesday, August 5, 2014

Way of controlling people during Karahattam.

கரகாட்டம் நடக்கும்போது தான்தான் ஊரில் பெரிய ஆள் என்று காட்டிக்கொள்ள அவ்வப்போது சிலபேர் ஆட்டத்தின் இடைய புகுந்து ஆட்டக்காரர்களுக்கு அறிவுரைகள் வழங்குவதுண்டு, இவர்களை மற்றவர்கள் யாரும் தட்டி கேட்டால் தகராறு வந்துவிடும். இந்தமாதிரி பெரியவர்களை கட்டுபடுத்த இதுவும் ஒரு வழி.

Tuesday, May 27, 2014

பேபால் இணையதள வங்கி (PayPal online banking)

1.       பேபால் என்றல் என்ன?
பேபால் என்பது ஒரு இணையதள வங்கி. இந்த இணையதள வங்கியில் யார்வேண்டுமேன்றாலும் எந்த நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும் எப்போது வேண்டுமானாலும் கணக்கு ஆரம்பித்துகொள்ளலாம்.. இதற்க்கு நம்ம ஊர் வங்கியில் கணக்கு ஆரம்பிப்பது போல இருப்பிட சான்றிதழ், தனிநபர் அடையாள அட்டை, வங்கியில் ஏற்க்கனவே கணக்கு வைத்திருப்பவரின் கையெழுத்து என்று எதுவுமே தேவையில்லை. இன்னும் சொல்லபோனால் குறைத்தபட்ச இருப்பு தொகையாக ஒரு பைசா கூட செலுத்த தேவை இல்லை..
2.       பேபால் கணக்கு எதற்க்காக ஆரம்பிக்க வேண்டும்?
நமக்குதான் ஊரில் SBI, INDIAN BANK என்று வங்கி கணக்கு இருக்கிறதே இதன் மூலமாகவே வலைத்தளத்தில் பொருட்களை வாங்கவும் மற்றும் பண பரிமாற்றம் செய்துகொள்ளலாமே பின்னர் எதற்காக வலைத்தளத்தில் புதிதாக வங்கி கணக்கு ஆரம்பிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். உண்மைதான் நமது நாட்டிற்குள் நீங்கள் பண பரிமாற்றம் கொள்வதாக இருந்தால் உங்களுக்கு பேபால் போன்ற வங்கி கணக்கு தேவை இல்லை. ஆனால் உங்களுக்கு பன்னாட்டு சந்தையில் பண பரிமாற்றம் இருந்தால் நம்ம ஊர் வங்கி கணக்குகள் மட்டும் இதற்கு போதாது.
அது என்ன “பன்னாட்டு சந்தையில் பண பரிமாற்றம்” என்று நீங்கள் கேட்கலாம். சமீபகாலங்களாக உலகம் முழுவதும் வீட்டில் இருந்தபடியே பகுதி நேர வேலையாக இணையதளங்களில் கட்டுரைகள் எழுதுவது, சில நிறுவனங்களுக்கு தேவையான விவரங்களை பதிவு செய்வது, பணத்திற்காக விளம்பரங்களை பார்ப்பது போன்ற  செயல்பாடுகள் அதிகரித்து வருகிறது.  இந்த பணிகளுக்காக இணையதளங்கள் இவர்களுக்கு டாலரில்தான் சம்பளம் கொடுக்கிறது. இதை வெவ்வேறு நாட்டை சேர்த்தவர்களுக்கு அவர்கள் நாட்டு பணமாக மாற்றி கொடுப்பதற்கு இடையில் ஒரு வங்கி தேவைபடுகிறது. அதுதான் பேபால் இணையதள வங்கி. இதனுடைய முக்கிய வேலை எந்த நாட்டிலிருந்தும் உங்களுக்கு பணம் அனுப்பபட்டலும் அதை உங்கள் நாட்டு கரன்சியாக மாற்றி உங்கள் வங்கி கணக்கில் செலுத்திவிடும்.
3.       பேபால் இணையதள வங்கி ஆபத்தானதா?
நிச்சயமாக இல்லை. வதந்திகளை நம்பாதீர்கள். நீங்களே விரும்பினால்கூட உங்கள் வங்கியிலிருந்து பேபால் இணையதளவங்கிக்கு பணத்தை செலுத்தமுடியாது. இதை நீங்கள் உங்கள் வங்கியின் வலைதள பாங்கிங் (Internet Banking) மூலமாகவோ அல்லது டெபிட் கார்டு (Debit card) மூலமாகவோ முயற்சி செய்தாலும் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பேபால் கணக்குக்கு பணத்தை மாற்ற முடியாது. பேபால் இணையதளவங்கியிலிருந்து நீங்கள் பணம் பெற மட்டுதான் முடியும்.
4.       பேபால் கணக்கு ஆரம்பிப்பது எப்படி?
பேபால் கணக்கு ஆரம்பிப்பது மிகவும் எளிது. இதற்கு தேவை உங்கள் பேரில் ஒரு மின்னஞ்சல் கணக்கு, ஒரு பான் கார்டு மற்றும் உள்ளூர் வங்கி கணக்கு. பேபால் கணக்கை ஆரம்பிக்க கிழ்க்கண்ட வழிகளை பின்பற்றவும்.
1)       முதலில் பேபால் இணையதளத்திற்கு செல்லுங்கள். அதில் இடதுபக்க மூலையில் SIGN UP என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள். இது உங்களை பேபால் இணையத்தளத்தில் பதிவுசெய்யும் பக்கத்திற்கு எடுத்துசெல்லும்.

2)       இந்த பக்கத்தில் முதலில் உங்கள் நாடு (இந்திய) எது என்பதை தேர்வு செய்துவிட்டு An account for individuals என்ற கட்டத்தில் உள்ள   Get Started  என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

3)       அடுத்ததாக உங்களை பற்றிய விவரங்களை (Enter your information) பதிவு செய்யும் பக்கம் தோன்றும். இதில் முதலில் உங்கள் மின்னஞ்சலை பதிவுசெய்யுங்கள். இரண்டாவதாக இந்த வங்கியின் இணையதளத்திற்கு செல்ல ஒரு கடவு சொல்லை பதிவு செய்யுங்கள். இந்த கடவு சொல் ஏற்க்கனவே பயன்பாட்டில் இல்லாத புதிய சொல்லாகவும் எளிதில் உகிக்க முடியாததாகவும் பார்த்து தேர்வு செய்யுங்கள். மூன்றாவதாக உங்கள் பெயரை பதிவு செய்யவேண்டும். இதில் முதல் பெயர், நடு பெயர், மற்றும் கடேசி பெயர் என்று மூன்று பெயர்களை பதிவு செய்ய கேட்க்கபட்டிருக்கும். நம்ம ஊரில் எல்லோருக்கும் ஒரே பெயர்தான். ஆகவே உங்கள் பெயர் “சுப்பிரமணியன்” என்றால் முதல் பெயரில் “சுப்பிரமணியன்” என்று பதிவு செய்யுங்கள். உங்கள் தந்தையின் பெயர் கணபதி என்றால் கடேசி பெயரில் கணபதி என்று பதிவு செய்யுங்கள். இதில் நீங்கள் முக்கியமாக கவனிக்க வேண்டியது உங்கள் பான் கார்டில் உங்கள் பெயர் எப்படி பதிவுசெயயபட்டு இருக்கிறதோ அதேபோல் ஒரு எழுத்துகூட மாறாமல் அப்படியே பதிவு செய்யுங்கள். உதாரணமாக உங்கள் பெயர் SUBRAMANIYAN என்று பான் கார்டில் இருந்தால் SUBRAMANIYAN என்றும் அல்லது G SUBRAMANIYAN  என்று பான் கார்டில் இருந்தால் G SUBRAMANIYAN என்று பதிவு செய்யுங்கள். எல்லா விவரங்களையும் பதிவு செய்துவிட்டு Agree and Create Account என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.

4)       இதை தொடர்ந்து பாதுகாப்பு கேள்வி (Security Challenge) கேட்டு ஒரு பக்கம் தோன்றும். அதில் குறிப்பிட்டுள்ள எழுத்துகளை அப்படியே பதிவு செய்யவும்.

5)       அடுத்ததாக உங்கள் டெபிட் கார்டு அல்லது கிரிட்ட் கார்டு நம்பரை பதிவு செய்யவேண்டி ஒரு பக்கம் வரும். தற்போது இது தேவையில்லை. பின்னர் எப்போது வேண்டுமானாலும் நீங்கள் இதை பதிவு செய்துகொள்ளலாம். இந்த பக்கத்தின் அடியிலுள்ள Go to My Account என்ற வாசகத்தை கிளிக் செய்யுங்கள்.

6)       இப்போது உங்கள் பேபால் வங்கி கணக்கை காட்டும் பக்கத்திற்கு வந்துவிடுவீர்கள். அந்த பக்கத்தில் To receive payments as per Indian regulations, please complete your tasks என்ற வாசகத்தில் complete your tasks  என்ற வாசகத்தை கிளிக் செய்யுங்கள். இது உங்களை Task Board பக்கத்திற்கு எடுத்து செல்லும்.

7)       இந்த பக்கத்தில் நீங்கள் செய்யவேண்டிய நான்கு முக்கிய பணிகள் உள்ளன. அவைகள் 1) உங்கள் பான் கார்டை சரிபார்ப்பது, 2) உங்கள் மின்னஞ்சலை சரிபார்ப்பது, 3) நீங்கள் பணம் பெறப்போகும் உங்கள் வங்கி கணக்கை பேபால் வங்கிக்கு தெரிவிப்பது, மற்றும் 4) நீங்கள் இணையதளங்களில் இருந்து பணம் பெறுவதற்கான நோக்கம் என்ன என்பதை தெரிவிப்பது.


8)       முதலில் Task Board இல் உள்ள Provide PAN என்ற வாசகத்திற்கு எதிரே உள்ள Start என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள். இது உங்களை பான் கார்டு எண் பதிவு செய்யும் பக்கத்திற்கு எடுத்துசெல்லும். இதில் உங்கள் பான் கார்டு எண்னை பதிவு செய்த உடன் உங்கள் பெயரோடு பான் எண்ணெனை பேபால் இணையத்தளம் சரிபார்க்கும். அது சரியாக இருந்தால் உங்கள் பான் சரிபார்க்கபட்டுவிட்டது என்ற ஒரு செய்தி வரும். இந்த செய்தியில் கீழே உள்ள Go to task board என்ற வாசகத்தை கிளிக் செய்யுங்கள். இது உங்களை மீண்டும் Task Board பக்கத்திற்கு எடுத்து செல்லும்.

9)       தற்போது Task Board இல் உள்ள Confirm email என்ற வாசகத்திற்கு எதிரே உள்ள Pending என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள். இதைதொடர்ந்து பேபால் இணையதள வங்கியிலிருந்து உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வரும். அதை திறந்து அதில் Confirm Email என்ற வாசகத்தை கிளிக் செய்தால் அது உங்களை பேபால் இணையதள வங்கினுள் செல்லும் கடவு சொல் பக்கத்திற்கு எடுத்து செல்லும். அதில் நீங்கள் ஏற்கனவே கொடுத்திருந்த கடவுசொல்லை பதிவு செய்யுங்கள். உடனே இரண்டு பாதுகாப்பு கேள்விகளுக்கு நீங்கள் பதில் அளிக்ககோரி ஒரு பக்கம் வரும். இது உங்கள் கடவு சொல் உங்களுக்கு மறந்துவிட்டால் அதை திரும்ப கொடுப்பதற்காக கேட்கப்படும் கேள்விகள். இவைகளை பதிவு செய்த உடன் திரும்பவும் உங்கள் டெபிட் கார்டு அல்லது கிரிட்ட் கார்டு நம்பரை பதிவு செய்யவேண்டி ஒரு பக்கம் வரும். அவைகளை பதிவுசெய்யாமல் மீண்டும் Task Board பக்கத்திற்கு செல்லுங்கள். (My Account வழியாக)

10)    தற்போது Task Board இல் உள்ள Add bank account என்ற வாசகத்திற்கு எதிரே உள்ள Start என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள். இது உங்களை உங்கள் வங்கி கணக்கை பதிவு செய்யும் பக்கத்திற்கு எடுத்து செல்லும். இதில் உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். இந்த பெயர் நீங்கள் பான் கார்டில் குறிப்பிட்ட பெயரோடு ஒத்துபோகவேண்டும். பின்னர் உங்கள் வங்கி கணக்கு எண்னை பதிவு செய்யுங்கள். அதன்பின் உங்கள் வங்கியின் IFSC குறியீடு எண்னை (இந்த எண் உங்கள் வங்கி பாஸ் புக்கில் இருக்கும்) பதிவு செய்துவிட்டு Confirm என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள். உடனே உங்கள் வங்கியின் விவரம் அங்கே காட்டப்படும். அந்த விவரம் உங்கள் வங்கியுடன் ஒத்துபோகவில்லை என்றால் மீண்டும் சரியான IFSC குறியீடு எண்னை பதிவு செய்யுங்கள். கடைசியில்  Review  என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள். இதை தொடர்ந்து உங்கள் வங்கி கணக்கின் சுருக்கத்தை காட்டி ஒரு சின்ன செய்தி வரும். அந்த செய்தியிலுள்ள Submit என்ற பட்டனை கிளிக் செய்தால் மற்றும் ஒரு செய்திவரும். அதில் “நீங்கள் ஒரு வங்கி கணக்கை பேபால் இணையதள வங்கியுடன் சேர்த்துகொண்டீர்கள் என்றும் ஓரிரு நாளில் இரண்டு சிறிய தொகைகள் உங்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும் அந்த தொகையை நீங்கள் தெரிவித்தபின்னரே உங்கள் வங்கி கணக்கு உறுதி செய்யப்படும்” என்ற ஒரு செய்தி வரும். இந்த செய்தியில் கீழே உள்ள Go to task board என்ற வாசகத்தை கிளிக் செய்து மீண்டும் Task Board பக்கத்திற்கு செல்லுங்கள்.

11)   இனி Task Board இல் உள்ள Provide Purpose Code என்ற வாசகத்திற்கு எதிரே உள்ள Start என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள். இது நீங்கள் இணையதளங்களில் இருந்து பணம் பெறுவதற்கான நோக்கம் என்ன என்பதை பதிவு செய்யும் பக்கத்திற்கு எடுத்து செல்லும். இங்கே உங்கள் நோக்கத்தை பதிவு செய்யுங்கள். இணையதளங்களில் விளம்பரங்களை பார்த்து பணம் சம்பாதிப்பதாக இருந்தால் Advertising and market research என்பதை தேர்ந்தெடுங்கள். அல்லது வேறு எதாவது வேலைக்காக பணம் பெறுவதாக இருந்தால் அதற்க்கான சரியான நோக்கத்தை தேர்ந்தெடுங்கள். இல்லையென்றால் நீங்கள் பணம் பெறமுடியாது. அதன்பின் இந்த பக்கத்திலுள்ள Go to task board என்ற வாசகத்தை கிளிக் செய்து மீண்டும் Task Board பக்கத்திற்கு செல்லுங்கள்.

12)   இப்போது Task Board பக்கத்தில் நீங்கள் செய்யவேண்டிய நான்கு முக்கிய பணிகளும் முடிவுஅடைந்துவிட்டது என்ற செய்தி வரும். இனி நீங்கள் எந்தவித தடையுமின்றி இணையதளங்கள் மூலமாக வேலைகளை செய்து பணம் பெற்றுகொள்ளலாம்.


5.       பேபால் இணையதள வங்கிபோல் வேறு என்ன வங்கிகள் உள்ளன?
பேபால் இணையதள வங்கி போல் பேச என்ற இணையதள வங்கிகளும் நம்பகமாக இணையதள வங்கி சேவைகளை செய்து வருகின்றது